/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மணல் கடத்தலில் ஈடுபட்ட சரக்கு வாகனம் பறிமுதல்
/
மணல் கடத்தலில் ஈடுபட்ட சரக்கு வாகனம் பறிமுதல்
ADDED : ஜூன் 17, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, :குளித்தலை அருகே, நேற்று முன்தினம் இரவு எஸ்.ஐ., சிங்காரம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வதியம், கண்டியூர் பகுதியில் மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது.
கண்டியூர் வாய்க்கால் பாலம் அருகே, வேகமாக வந்த டாடா பிக்கப் சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது நம்பர் இல்லாத வாகனத்தில், அரசு அனுமதியின்றி, காவிரி ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது. மணல் கடத்தலில் ஈடுபட்ட கண்டியூர் குடித்தெருவை சேர்ந்த கார்த்திக் மற்றும் டிரைவர் அங்கிருந்து தப்பினர்.
குளித்தலை போலீசார், வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.