/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரதட்சணை கொடுமை கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
/
வரதட்சணை கொடுமை கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 13, 2024 03:57 AM
குளித்தலை,: கரூர் ஜவகர் பஜாரை சேர்ந்த ராகவி, 26, என்பவருக்கும், தோகைமலையை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும், 2019 பிப்., 10ல், திருமணம் நடந்தது.
அப்போது, 25 பவுன் நகை, ஒரு லட்சம் மதிப்பிலான வைர நகை, வீட்டிற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை வாங்கி கொடுத்து திருமணம் செய்து வைத்தனர்.இந்நிலையில், மகேந்திரன் என்பவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, ராகவியிடம் சரியாக குடும்பம் நடத்த மறுத்து வந்தார். இதுகுறித்து ராகவி தன் மாமியார் சுமதி, நாத்தனார் ராஜலட்சுமி ஆகியோருடன் கேட்டார்.அப்போது, என் மகன் அப்படிதான் நடந்து கொள்வார், மேலும், 25 பவுன், 5 லட்சம் ரொக்கம், 1 கிலோ வெள்ளி பொருட்களை கொண்டு வந்தால் குடும்ப நடத்துவார், இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியே போ என, மூவரும் தகாத வார்த்தை பேசி, விரட்டி அனுப்பினர்.பாதிக்கப்பட்ட ராகவி கொடுத்த புகார்படி, குளித்தலை மகளிர் போலீசார் கணவர் மகேந்திரன், மாமியார் சுமதி, நாத்தனார் ராஜலட்சுமி ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.