/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குறிப்பிட்ட நேரத்துக்கு பின் பட்டாசு வெடித்த 30 பேர் மீது வழக்கு
/
குறிப்பிட்ட நேரத்துக்கு பின் பட்டாசு வெடித்த 30 பேர் மீது வழக்கு
குறிப்பிட்ட நேரத்துக்கு பின் பட்டாசு வெடித்த 30 பேர் மீது வழக்கு
குறிப்பிட்ட நேரத்துக்கு பின் பட்டாசு வெடித்த 30 பேர் மீது வழக்கு
ADDED : நவ 02, 2024 01:22 AM
கரூர், நவ. 2-
கரூர் மாவட்டத்தில், நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்த, 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை அன்று பொதுமக்கள் காலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரையிலும், இரவு, 7:00 மணி முதல், 8:00 மணி வரை வரையிலும், இரண்டு மணி நேரம் மட்டுமே, 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையின் போது, நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்த, 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.