/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேலாளரை பீர் பாட்டிலால் தாக்கிய மூவர் மீது வழக்கு
/
மேலாளரை பீர் பாட்டிலால் தாக்கிய மூவர் மீது வழக்கு
ADDED : அக் 23, 2024 07:26 AM
கரூர்: கரூர் அருகே, பீர் பாட்டிலால் டாஸ்மாக் மதுபான கடை மேலாளரை தாக்கிய, மூன்று பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், பாழையூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில், 50; இவர், நெரூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்ற செந்தமிழன், 27; விஜயராகவன், 26; இளவரசன், 26; ஆகியோர், 170 ரூபாய் மதிப்புள்ள பீர் பாட்டிலுக்கு, 150 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளனர். இதனால் மேலாளர் செந்தில் மீதி, 20 ரூபாய் கேட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த செந்தமிழன் உள்பட மூன்று பேர் பீர் பாட்டிலால், செந்திலை தாக்கியுள்ளனர். இதுகுறித்து செந்தில் கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் செந்தமிழன் உள்பட, மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.