/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாகனத்தில் மணல் கடத்தல் மூன்று பேர் மீது வழக்கு
/
வாகனத்தில் மணல் கடத்தல் மூன்று பேர் மீது வழக்கு
ADDED : அக் 20, 2024 01:25 AM
வாகனத்தில் மணல் கடத்தல்
மூன்று பேர் மீது வழக்கு
குளித்தலை, அக். 20-
குளித்தலை அடுத்த, நாப்பாளையம், வதியம், மணத்தட்டை, மருதுார், சாந்திவனம் உள்ளிட்ட காவிரி ஆற்று பகுதியில், இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக குளித்தலை டி.எஸ்.பி., செந்தில் குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது, வதியம் பஞ்., கீழ குறப்பாளையம் தங்கமணி, 32, நாப்பபாளையம் பிரபாகரன், 28, வாலாந்துார் அமர்நாத் ஆகிய மூன்று பேர், மகேந்திரா பிக்கப் சரக்கு வாகனத்தில் ஒரு யூனிட் மணல் கடத்தியது தெரிய வந்தது.
குளித்தலை போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து, மூன்று பேர் மீது வழக்கு பதிந்து, தங்கமணியை கைது செய்தனர். இருவர் தலைமறைவாக உள்ளனர்.