/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமியை கர்ப்பமாக்கிய இருவர் மீது வழக்கு
/
சிறுமியை கர்ப்பமாக்கிய இருவர் மீது வழக்கு
ADDED : ஜன 13, 2024 03:57 AM
குளித்தலை,: குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., திருமலை நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா, 20.
வெங்காய வியாபாரி. இவர், 18 வயது பூர்த்தியாகாத உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின், சிறுமி நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.இது குறித்து, கரூர் சைல்ட் லைனுக்கு வந்த தகவல்படி தோகைமலை யூனியன் விரிவாக்க அலுவலர் மாரியாயி கொடுத்த புகார்படி, ராஜேஷ்கண்ணா மீது, குளித்தலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.* இரணியமங்கலம் பஞ்., வளையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி விநாயகம், 24, கூலித்தொழிலாளி, அதே பகுதி சேர்ந்த, 17 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து கொண்டார். இதில் சிறுமி ஒன்பது மாத கர்ப்பமாக உள்ளார்.சைல்டு லைனுக்கு வந்த தகவல்படி, குளித்தலை யூனியன் ஊர் நல அலுவலர் சரோஜா கொடுத்த புகார்படி, குளித்தலை மகளிர் போலீசார் மணிவிநாயகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.