/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டுக்கு 'சீல்' வைப்பதை எதிர்த்து தீக்குளிக்க முயன்ற 4 பேர் மீது வழக்கு

ADDED : நவ 22, 2025 02:21 AM
கரூர், கரூர் அருகே, கோவிலுக்கு சொந்தமான வீட்டை மீட்க எதிர்ப்பு தெரிவித்து, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, சின்ன வடுகப்பட்டியில் உள்ள கண்ணம்மாள் என்பவரது வீட்டை, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் காலை, 'சீல்' வைத்து மீட்க சென்றனர். அப்போது, கண்ணம்மாள், 60, அவரது மகன் சக்திவேல், 27, வெண்ணைமலையை சேர்ந்த பரமேஸ்வரி, 50, அவரது கணவர் மகேந்திரன், 53, ஆகியோர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்போது, போலீசார் நான்கு பேரையும் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
இதுகுறித்து, கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் சுகுணா, 45, போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, தீக்குளிக்க முயன்ற கண்ணம்மாள் உள்பட, நான்கு பேர் மீது வாங்கல் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.