/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண்ணுக்கு கொலை மிரட்டல் 6 பேர் மீது வழக்கு; இருவர் கைது
/
பெண்ணுக்கு கொலை மிரட்டல் 6 பேர் மீது வழக்கு; இருவர் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் 6 பேர் மீது வழக்கு; இருவர் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் 6 பேர் மீது வழக்கு; இருவர் கைது
ADDED : ஜூலை 18, 2025 02:11 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த தலைவாசல் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மனைவி தமிழ்ச்செல்வி, 26; கடந்த, 15ல், தமிழ்ச்செல்வியின் தாய்மாமன் மகள் மருதாம்பாள், இவரது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதே ஊரை சேர்ந்த சரவணன், 45, முருகன், 40, கருணைவேல், 43, ஆகியோர், தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். இதனால், மருதாம்பாள் அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு, தமிழ்ச்செல்வியிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து, வீட்டிற்கே வந்த சரவணன், முருகன், கருணைவேல், சிலம்பரசி, 36, விஜயகுமாரி, 23, லட்சுமி, 45, ஆகிய ஆறு பேரும், மீண்டும் தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். இதுகுறித்து தட்டிக்கேட்ட தமிழ்ச்செல்வி மற்றும் இவரது உறவினர்கள் மணிமேகலை, மாரியாயி, கலையரசி, மருதாம்பாள், கன்னியம்மாள், பெரியசாமி ஆகிய, ஏழு பேரை, குச்சியால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து தமிழ்ச்செல்வி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார், ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, முருகன், கருணைவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, நான்கு பேரை தேடி வருகின்றனர்.