/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அண்டா திருடியதாக தாக்கிய 7 பேர் மீது வழக்கு
/
அண்டா திருடியதாக தாக்கிய 7 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 27, 2025 04:22 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த கே.பேட்டையை சேர்ந்தவர் சாந்தி, 55; கூலித்தொழிலாளி. இவரது மகன் கிருபானந்தன். இவரது நண்பர், பட்டவர்த்தி தாமு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன்பின், தாமு வீட்டில் இருந்த பித்தளை அண்டாவை காண-வில்லை. கிருபானந்தன் தான் எடுத்துச்சென்று விட்டதாக கூறி, தாமு மற்றும் பட்டவர்த்தியை சேர்ந்த செல்வா, 30, தெற்கு மணத்தட்டை சேது, 26, கீழதண்ணீர்பள்ளி கவுதம், 27, நடுவ-தியம் அழகேசன், 32, பட்டவர்த்தி கோபால், 25, துறைபாண்டி, 33, கீழதண்ணீர்பள்ளி கிருஷ்ணன், 23, மற்றும் சிலர் ஒன்று-சேர்ந்து, கிருபானந்தனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகார்படி, குளித்தலை போலீசார், ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.