/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தங்கைக்கு மிரட்டல் அண்ணன் மீது வழக்கு
/
தங்கைக்கு மிரட்டல் அண்ணன் மீது வழக்கு
ADDED : டிச 02, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை, பெரியபாலம் பாலாஜி நகரை சேர்ந்தவர் சிவமொ-ழியால், 46. இவரது அண்ணன் அசோக்குமார், 48. கடந்த ஜூன், 9ல், தங்கை சிவமொழியால் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினார்.
இதுகுறித்து கேட்ட தங்கையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்-துள்ளார். இதுகுறித்து சிவமொழியால், குளித்தலை குற்றவியல் எண்.1ல் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, குளித்தலை போலீசார் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.