/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவன் மீது வழக்கு
/
முதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவன் மீது வழக்கு
முதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவன் மீது வழக்கு
முதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவன் மீது வழக்கு
ADDED : ஜூலை 06, 2025 01:10 AM
கரூர், கரூர் அருகே, முதல் மனைவியிடம் வரதட்சணை கேட்ட கணவர் மற்றும் இரண்டாவது மனைவி மீது, மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கரூர் மாவட்டம், சணப்பிரட்டி பகுதியை சேர்ந்தவர் துர்கா, 24; இவர், தேனி மாவட்டம், போடி நாயக்கனுாரை சேர்ந்த தேவகுமார், 24, என்பவரை காதலித்து கடந்த, 2020ல், திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குடி பழக்கம் உள்ள தேவகுமார், வரதட்சணை கேட்டு, துர்காவை அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளார்.
மேலும் கடந்த ஜூன், 6ல் பூஜா, 22, என்ற பெண்ணை, தேவகுமார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த துர்கா, மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கரூர் மகளிர் போலீசார் தேவகுமார், அவரின் இரண்டாவது மனைவி பூஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.