/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
5 பவுன் தங்க நகை மாயம் வேலைக்கார பெண் மீது வழக்கு
/
5 பவுன் தங்க நகை மாயம் வேலைக்கார பெண் மீது வழக்கு
ADDED : ஜூலை 05, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், க.பரமத்தி அருகே, தங்க நகைளை திருடியதாக வேலைக்கார பெண் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே அய்யம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன சுந்தரம், 55; இவர், வீட்டில் வைத்திருந்த ஐந்து பவுன் தங்க நகைளை கடந்த ஜனவரி மாதம் காணவில்லை. இதுகுறித்து, மோகன சுந்தரம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், மோகன சுந்தரம் வீட்டில் வேலை செய்து வந்த, திருச்சி மண்ணச்சநல்லுார் பகுதியை சேர்ந்த சுமதி, 40; என்பவர் திருடியது தெரிய வந்தது. இதனால், க.பரமத்தி போலீசார் சுமதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.