ADDED : ஜூலை 23, 2026 06:07 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த புத்துார் பஞ்., ஆணைக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் காமராஜ்
மனைவி தேவிகா, 50; கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தன்
கணவரின் பங்காளிகளான அண்ணாதுரை மகன் ஜெயராஜ், பிரகாஷ்,
சங்கப்பிள்ளை மகன் செல்வம் ஆகியோருக்கு, பாதை சம்பந்தமான வழக்கு
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த, 17
மதியம், 1:45 மணிக்கு, ஆணைகவுண்டம்பட்டி சந்திரசேகர் என்பவரது
வீட்டின் அருகில் உள்ள பாதையை அளந்து கொடுப்பதற்காக
வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் வந்திருந்தனர். அப்போது,
கணவரின் பங்காளிகள், நிலத்தை அளக்க மறுப்பு தெரிவித்தனர். இதை
எதிர்த்து தேவிகா தன் உறவினர்களுடன் சேர்ந்து பொக்லைன் இயந்திரம் முன்
அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, ஜெயராஜ், பிரகாஷ் ஆகிய
இருவரும் சேர்ந்து தேவிகாவின் உறவினர் சந்திரசேகரை தாக்கினர்.
தேவிகா தடுத்தபோது, செல்வம் என்பவர் குச்சியால் தாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட
சந்திரசேகர், தேவிகா ஆகிய இருவரும், குளித்தலை அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தேவிகா கொடுத்த
புகார்படி, ஜெயராஜ், பிரகாஷ், செல்வம் ஆகிய மூவர் மீதும்; அண்ணாதுரை
மனைவி இளஞ்சியம், 55, கொடுத்த புகார்படி, சந்திரசேகர், முருகானந்தம்
ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த நங்கவரம் போலீசார்,
விசாரித்து
வருகின்றனர்.
