/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., கொடி கம்பங்களை நட்ட தொழிலாளி மீது வழக்கு
/
அ.தி.மு.க., கொடி கம்பங்களை நட்ட தொழிலாளி மீது வழக்கு
அ.தி.மு.க., கொடி கம்பங்களை நட்ட தொழிலாளி மீது வழக்கு
அ.தி.மு.க., கொடி கம்பங்களை நட்ட தொழிலாளி மீது வழக்கு
ADDED : ஜூன் 24, 2025 01:03 AM
கரூர், கரூரில், அ.தி.மு.க., கொடி கம்பங்களை நட்ட, கூலி தொழிலாளி மீது போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் மாவட்ட, அ.தி.மு.க., தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம், நேற்று முன்தினம் காலை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது. அதற்காக, கரூர்-கோவை சாலையில் இரும்பு கம்பியில் கட்டப்பட்ட, அ.தி.மு.க., கொடிகள் நடப்பட்டன. இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி, போலீஸ் எஸ்.ஐ., முத்துசாமி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, அ.தி.மு.க., கொடி கம்பங்களை நட்ட, அரவக்குறிச்சி ராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித்குமார், 33; என்பவர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.