/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது வழக்கு
/
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது வழக்கு
ADDED : டிச 04, 2024 01:43 AM
கரூர், டிச. 4-
கரூர் மாவட்டம், தொழிற்பேட்டை வெள்ளாப்பட்டி பகுதியை சேர்ந்த தங்க வேல் மகன் சுரேந்தர், 27; இவர், கரூர் பசுபதி
பாளையம் பகுதியை சேர்ந்த, 25 வயது பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் சுரேந்தர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம் பெண், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்ற மதுரை கிளை, இளம்பெண் புகாரை விசாரித்து, நடவடிக்கை எடுக்க, மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, கரூர் மகளிர் போலீசார், சுரேந்தர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.