ADDED : ஜூலை 15, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த நடுப்பட்டியை சேர்ந்தவர் நல்லசாமி, 44; கொத்தனார். இவர், குளித்தலை அடுத்த வாழ்வார்மங்கலம், ஒத்தக்கடை தமிழ்ச்செல்வி என்பவர் நிலத்தில் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது, கன்னிமார்பாளையம் அங்கன்வாடி பணியாளர் விமலா, 45, கீரனுாரை சேர்ந்த கப்பல் கட்டும் இன்ஜினியர் மணி, 35, கீரனுார் விவசாயி ராமசாமி, 70, ஆகியோருக்கும், தமிழ்ச்செல்விக்கு இடையே சொத்து தகராறு இருப்பதாக கூறி, கொத்தனார் நல்லசாமியை தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நல்லசாமி கொடுத்த புகார்படி, விமலா, மணி, ராமசாமி ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
