/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு
/
தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : பிப் 23, 2024 02:39 AM
குளித்தலை;குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், சின்னராசாப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.
அதே ஊரை சேர்ந்தவர் செல்வராஜ். இருவரும் சித்தப்பா, பெரியப்பா உறவு முறை. இவர்கள் பொது வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த ஜன., 30ல் வெள்ளைச்சாமி, பொதுகளத்தில் நெல்லை காய வைத்திருந்தார். அப்போது, யாரோ நெல்லை அள்ளி வீட்டுக்குள் கொட்டி விட்டனர். இதுகுறித்து, வெள்ளைச்சாமி, இவரது மனைவி ஆகியோர் சேர்ந்து, செல்வராஜிடம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், செல்வராஜ் மகன் கிஷோர் குமார், மனைவி கிருஷ்ணவேணி, தாயார் புஷ்பம் ஆகியோர், தகாத வார்த்தையில் பேசி, தாக்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட வெள்ளைச்சாமி, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரை தேடி வருகின்றனர்.