/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நில புரோக்கர்களை கடத்தி சென்று தாக்குதல்:மூவர் மீது வழக்கு பதிவு
/
நில புரோக்கர்களை கடத்தி சென்று தாக்குதல்:மூவர் மீது வழக்கு பதிவு
நில புரோக்கர்களை கடத்தி சென்று தாக்குதல்:மூவர் மீது வழக்கு பதிவு
நில புரோக்கர்களை கடத்தி சென்று தாக்குதல்:மூவர் மீது வழக்கு பதிவு
ADDED : டிச 26, 2024 03:03 AM
கரூர்: கரூரில் தங்கியிருந்த, நில புரோக்கர்களை கடத்தி சென்று அடித்து உதைத்து, பணம் பறித்த மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்ப-திவு செய்தனர்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத், 60, சென்னையை சேர்ந்தவர் கனகராஜ், 43, காஞ்சிபுரத்தை சேர்ந்-தவர் கார்த்திக், 43. மூன்று பேரும் நில புரோக்கர் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள், மூன்று பேரும் நிலம் விற்பது, வாங்கு-வது தொடர்பாக, கரூரில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த, 23ல் தங்கியிருந்தனர்.
அப்போது, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த கோபால், 60, கரூரை சேர்ந்த ஜெகன், கோவையை சேர்ந்த பார்த்திபன் ஆகியோர், சம்பத் உள்ளிட்ட மூன்று பேரை சந்தித்து, ஒட்டன்சத்திரத்தில் நிலம் இருப்பதாக கூறி, கத்தியை காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்றுள்ளனர். பிறகு செல்லும் வழியில், சம்பத், கனகராஜ், கார்த்திக் ஆகியோரை அடித்து உதைத்து, ஆறு லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு மொபைல் போனையும், கோபால் உள்ளிட்ட மூன்று பேர் பறித்து கொண்டு சென்றனர். தப்பி வந்த சம்பத் உள்ளிட்ட மூன்று பேரும், கரூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இதை-யடுத்து, போலீசார் கோபாலை கைது செய்து விசாரிக்கின்றனர். தப்பி ஓடிய ஜெகன், பார்த்திபன் ஆகியோரை டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.

