/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
/
த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
ADDED : பிப் 03, 2026 06:37 AM
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, அனுமதி இல்-லாமல் நீர்மோர் பந்தல் மற்றும் பிளக்ஸ் பேனர் வைத்த, த.வெ.க., நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா வையொட்டி தேரோட்ட விழா நடந்தது. அப்போது, கோவில் அடிவாரத்தில் த.வெ.க., சார்பில் நீர்மோர் பந்தல் மற்றும் பிளக்ஸ் பேனர் வைக்க, புகழூர் நகர த.வெ.க., துணை செயலாளர் நந்தகுமார் என்-பவர், போலீசிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்-பதால், போலீசார் அனுமதி மறுத்தனர்.ஆனால், தடையை மீறி த.வெ.க., சார்பில் நீர் மோர் பந்தல், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. இதையடுத்து, த.வெ.க., துணை செயலாளர் நந்த-குமார் உள்பட ஐந்து பேர் மீது வேலாயுதம்பா-ளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா-ரிக்கின்றனர்.

