/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனுமதியின்றி பட்டாசு விற்ற இருவர் மீது வழக்கு பதிவு
/
அனுமதியின்றி பட்டாசு விற்ற இருவர் மீது வழக்கு பதிவு
அனுமதியின்றி பட்டாசு விற்ற இருவர் மீது வழக்கு பதிவு
அனுமதியின்றி பட்டாசு விற்ற இருவர் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 23, 2025 01:42 AM
கரூர், கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் கடைவீதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அரசு அனுமதியின்றி எளிதில் தீப்பற்றி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும், சாலை ஓரத்தில் பட்டாசுகளை விற்பனை செய்வதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி எஸ்.ஐ., மனோகரன் தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
அங்கு, அரசு அனுமதியின்றி பட்டாசுகளை விற்பனை செய்து கொண்டிருந்த குப்பம் அருகே ஆண்டி சங்கிலிபாளையத்தை சேர்ந்த சேகர், 51, புன்னம்சத்திரம் அருகே பெருமாள் நகரை சேர்ந்த ஜோதிராஜ், 33, ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்