ADDED : நவ 13, 2026 06:48 AM
கரூர்:கறவை
மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி வரும், 17ம் தேதி நடக்கிறது என,
பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மைய தலைவர்
சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே,
பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும்
ஆராய்ச்சி மையத்தின் சார்பில், சான்றிதழுடன் கூடிய கறவை மாடு வளர்ப்பு
பயிற்சி வரும் 17-ம் தேதி நடக்கிறது. இதில் கறவை மாட்டு இனங்கள் மற்றும்
அவற்றின் சிறப்பு, கன்று பராமரிப்பு, கொட்டகை அமைப்பு, தீவனம் மற்றும்
மேய்ச்சல் மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, நோய் தடுப்பு, தடுப்பூசி
மற்றும் குடற்புழு நீக்க அட்டவணை, பண்ணை நிர்வாகம், பதிவேடு
பராமரிப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் சுயதொழில் வாய்ப்பு குறித்து
செயல்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும்,
புதியதாக பண்ணை அமைத்தல், இனத்தேர்வு மற்றும் தீவன திட்டமிடல்
தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்படும். பயிற்சியில்
பங்கேற்பவர்களுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகத்தின், சான்றிதழ், பயிற்சி கையேடு மற்றும் மதிய உணவு
வழங்கப்படும்.பயிற்சிக்கான கட்டணம், 590 ரூபாய். முன்பதிவு
செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
