ADDED : ஏப் 14, 2026 04:19 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம் :செக்கணம் பகுதியில், குடிநீர் பிரச்னை நிலவி வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சேக்கணம், எழுதியாம்பட்டி கிராமங்களுக்கு, குழாய்கள் வழியாக குடிநீர் வினியோகம் நடக்கிறது. தற்போது குடிநீர் போதுமானதாக கிடைக்கவில்லை.
இதனால் கிராம மக்கள் காவிரி குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, சிலர் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி வருகின்றனர். எனவே, காவிரி குடிநீர் முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
