ADDED : செப் 05, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த மருதுார் டவுன் பஞ்.,ல், 15 வார்டுகள் உள்ளன. காவிரி கூட்டு
திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேட்டுமருதுார் கிராமத்தில்
டவுன் பஞ்.,க்கு சொந்தமான பொது குடிநீர் பம்பு மற்றும் தனியாருக்கு
கட்டணத்தின் பேரில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பம்புகள் சில இடங்களில் உயர்ந்தும், தாழ்வாகவும் உள்ளதால் அனைவருக்கும் குடிநீர் சமமாக கிடைப்பதில்லை.
பெரும்பாலான
பொது குடிநீர் மற்றும் தனியார் பம்புகள் திறந்த வெளியாக இருப்பதால், பணம்
கட்டி இணைப்பு பெற்றுள்ள பொதுமக்களும். பொது பைப்பை நம்பியுள்ள
மக்களுக்கும் சரிவர குடிநீர் கிடைப்பதில்லை.
அனைவருக்கும் சமமாக தண்ணீர்
கிடைக்கும் வகையில், ஆய்வு செய்து தட்டுப்பாடு இல்லாத வகையில், குடிநீர்
வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
