/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி குடிநீர் குழாய் கேட் வால்வு அமைக்கும் பணி
/
காவிரி குடிநீர் குழாய் கேட் வால்வு அமைக்கும் பணி
ADDED : ஜன 28, 2025 07:09 AM
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் திட்டப் பணிகளுக்கான கேட் வால்வு அமைக்கும் பணி, மேட்டு மகாதானபுரம் நெடுஞ்சாலை அருகில் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வார்டுகளுக்கு அம்ரூத் திட்டம் மூலம், குடிநீர் திட்டப் பணிகள் செய்யப்படுகிறது. இதில் மகாதானபுரம் பஞ்சாயத்து காவிரி ஆற்றில் இருந்து, குடிநீர் குழாய் வழியாக காவிரி நீர் எடுத்து செல்லும் வகையில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் வழியாக காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதற்காக, கேட் வால்வு அமைக்கும் பணி மேட்டு மகாதானபுரம் நெடுஞ்சாலை அருகில் சாலையோர பகுதியில் நடந்தது. இப்பணியில், குடிநீர் பராமரிப்பு பணி தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.