ADDED : ஆக 03, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த மணவாசி பஞ்., கோரக்குத்தி, நத்தமேடு, மேட்டங்கிணம்,
மணவாசி, ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு மக்களுக்கு பஞ்.,
நிர்வாகம் சார்பில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
சில
நாட்களாக மின்மோட்டார் பிரச்னை காரணமாக கிராமங்களில் காவிரி நீர்
வினியோகம் தடை ஏற்பட்டு, மக்களுக்கு சரி வர குடிநீர் கிடைக்கமால்
அவதிப்பட்டுள்ளனர்.
எனவே, பஞ்., நிர்வாகம் மின்மோட்டார்
பிரச்னையை சரி செய்து மீண்டும் மக்களுக்கு குடிப்பதற்காக காவிரி
குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், யூனியன்
நிர்வாகம் கண்காணிப்பு செய்து மக்களுக்கு காவிரி நீர் கிடைக்க உறுதி
செய்ய வேண்டும்.
