தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ திருச்சி ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை தேவை

திருச்சி ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை தேவை

திருச்சி ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை தேவை


ADDED : நவ 30, 2025 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கரூர் அருகே, திருச்சி ரயில்வே வழித்தடத்தில் பெரிய அளவிலான, குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என, கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடம் அமைக்கப்பட்டது. ஒருபுறம் காவிரியாறு, மறுபுறம் கிளை வாய்க்கால்கள் மற்றும் சாலைகள் இடையே, கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடம் செல்கிறது. இதனால், இரட்டை ரயில்வே வழித்தடம் அமைக்க முடியாத நிலையில் கடந்த, 2019ல் தான் கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடம் மின் மயமாக்கப்பட்டது.

இதனால், அந்த ரயில்வே வழித்தடத்தில் பசுபதிபாளையம், சணப்பிரட்டி, லாலாப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில், ரயில்வே கேட்களை நிரந்தரமாக மூடும் வகையில் புதிதாக குகை வழிப்பாதைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகளவில் வாகனங்கள் செல்லும் கட்டளை சாலை ரயில்வே கேட் பகுதியில், சிறிய அளவிலான குகை வழிப்பாதையில், டூவீலர்கள் மட்டும் செல்ல முடியும். அந்த பாதையும் முட்புதராக உள்ளது. அதில், கனரக வாகனங்கள் செல்ல முடியாது. இதனால், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கட்டளை, ரங்கநாதபுரம், கீழ்மாயனுார், மாயனுார் பகுதிகளுக்கு, வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், அடிக்கடி ரயில்கள் செல்லும் போது காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடம் கட்டளை சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில், பெரிய அளவிலான குகை வழிப்பாதையை அமைக்க, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us