/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை யூனியன் அலுவலகத்தில் தலைகீழாக தொங்கும் 'சிசிடிவி'க்கள்
/
குளித்தலை யூனியன் அலுவலகத்தில் தலைகீழாக தொங்கும் 'சிசிடிவி'க்கள்
குளித்தலை யூனியன் அலுவலகத்தில் தலைகீழாக தொங்கும் 'சிசிடிவி'க்கள்
குளித்தலை யூனியன் அலுவலகத்தில் தலைகீழாக தொங்கும் 'சிசிடிவி'க்கள்
ADDED : டிச 26, 2024 01:44 AM
குளித்தலை, டிச. 26-
குளித்தலை யூனியன் அலுவலகம், கோட்டைமேட்டில் உள்ள ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அரசு வழிகாட்டுதல்படி, யூனியன் அலுவலகத்துக்கு வரும் பொது மக்களையும், அலுலர்களையும், கண்காணிக்கவும், பல்வேறு குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், வளாகத்தின் கீழ் பகுதியில் அலுவலகத்திற்குள் வருபவர்கள், அலுவலகத்திற்கு உள்ளே, வெளியே செல்பவர்கள், கண்காணிக்கவும் வடக்கு மற்றும் மேற்கு திசையில் அலுவலகங்களுக்கு செல்வோர், வருவோரை கண்காணிக்க,6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 5 கேமராக்கள் சேதமடைந்து பூமியை பார்த்தபடி உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி, சமூக விரோதிகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே, 'சிசிடிவி' கேமராக்களை சரி செய்து அனைவரையும் கண்காணிக்கும் வகையில் பொருத்த வேண்டும் என, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.