/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளியில் உற்சாக கொண்டாட்டம்: விளையாட்டு போட்டிகளில் ஆசிரியர்கள்

ADDED : செப் 06, 2024 07:22 AM
கரூர் : கோடங்கிபட்டி, அரசு பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி, விளையாட்டு போட்டிகளில் ஆசிரியர்கள் உற்சாகமாக விளையாடினர்.
கரூர் அருகில், கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் இந்திரா தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் சபரிவாசன், ஹரிணி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஆசிரியர்கள் சரோஜா, லோகநாதன், லோகாம்பாள், சாந்தி, பிரபா, கணினி ஆசிரியர் ரம்யா ஆகியோர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.இசை நாற்காலி, பாஸிங் பால், முறுக்கு கடித்தல், பலுான் உடைத்தல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, மாணவர்கள் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறினர்.நிகழ்ச்சியில், மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.