ADDED : மே 01, 2026 05:54 AM
கரூர்: கரூர், வீரராக்கியம் அருகில் சென்டர் மீடியன் இடைவெளியை கடந்து செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோரால் விபத்து காத்திருக்கிறது.
கரூர் -- --திருச்சி நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், புலியூர் பகுதியில் சிமென்ட் தொழிற்சாலை இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதனால், போக்குவரத்தை ஒழுங்குப்
ப-டுத்தும் நோக்கில், புலியூரில் இருந்து வீரராக்கியம் வரை, சாலை நடுவில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில், ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு சாலையை கடக்க வசதி-யாக, சென்டர் மீடியன் நடுவில் கான்கிரீட் கற்களை அகற்றி விட்-டுள்ளனர். இதனால், பாதசாரிகள் கடந்து செல்லும் போது, விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. அதிலும் புலியூர், வீரராக்கியம் அருகில் பல இடங்களில் சென்டர் மீடியனில் உள்ள கல்லை அகற்றி உள்ளனர். அதன் வழியாக சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் புகுந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் சென்டர் மீடியனை கடந்து செல்லும் போது, வாகனங்கள் மோதி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சென்டர் மீடியன் இடைவெளியை சரி செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
