தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மத்திய அரசின் சோலார் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசின் சோலார் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசின் சோலார் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : பிப் 26, 2024 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 07:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி : மத்திய அரசின் சோலார் பேனல் திட்டத்தில் விண்ணப்பித்து, பொதுமக்கள் மானியம் பெறலாம் என, தர்மபுரி மின்வாரியத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தர்மபுரி மாவட்டத்தில், அனைத்து வீட்டு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதில், ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க, 30,000 ரூபாய், 2 கிலோ வாட்டுக்கு, 60,000, 3 கிலோ வாட்டுக்கு, 78,000 ரூபாய் மத்திய அரசால் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு, வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் வழங்கப்படும். திட்டப்பணிகள் முடித்த, 7 நாட்களிலிருந்து, 30 நாட்களுக்குள் இத்தொகை வழங்கப்படும். ஒரு கிலோ வாட் சோலார் பேனல், ஒரு நாளில், 4 முதல், 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, www.pmsuryaghar.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us