/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்
/
மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 13, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:தமிழ்நாடு
மின் ஊழியர் மத்திய அமைப்பு, கரூர் வட்ட கிளை சார்பில், செயலாளர் தனபால்
தலைமையில், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மாலை
ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், துணை மின் நிலையங்களில் எஸ்.இ., இ.இ.,
ஏ.இ.இ., ஏ.இ., பதவிகளை ரத்து செய்ய வேண்டும். மின் வாரியத்தையும், மின்
கட்டமைப்பையும் சீரழிக்கும், சட்ட பிரிவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில
துணைத்தலைவர் கோபால கிருஷ்ணன், வட்ட கிளை துணைத் தலைவர் சுப்பிரமணி,
நிர்வாகிகள் ஈஸ்வரன், நெடுமாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.

