/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழில்முனைவோருக்கான சான்றிதழ் படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு
/
தொழில்முனைவோருக்கான சான்றிதழ் படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு
தொழில்முனைவோருக்கான சான்றிதழ் படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு
தொழில்முனைவோருக்கான சான்றிதழ் படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 22, 2024 06:17 AM
கரூர்: 'தொழில்முனைவோர் புத்தாக்கம் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு நிறுவனம், இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பை தொடங்கவுள்ளது. இந்த படிப்பு சேர விண்ணப்பம் மற்றும் நேர்காணல் செப்டம்பர் கடைசி வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டத்திற்கு ஆண்டுக்கு, 80,000 ரூபாய்- கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் பட்டதாரிகள் பயிற்சியில் சேரலாம். இது தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். வேலைவாய்ப்புக்கான படிப்பு அல்ல. பயிற்சி முழுவதும் சென்னையில் உயர் தரத்துடன் கூடிய வகுப்பறைகளில் நடத்தப்படும். மேலும் தகவலுக்கு கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிமியோன்ராஜ் 8668107552, 8668101638 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.