/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் மாற்றுத்திறனாளிகள் செஸ் சங்கம் தொடக்கம்
/
கரூரில் மாற்றுத்திறனாளிகள் செஸ் சங்கம் தொடக்கம்
ADDED : அக் 18, 2025 01:13 AM
கரூர், கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் செஸ் சங்கம் தொடக்க விழா, தலைவர் கோகுல் தலைமையில் நாரதகான சபாவில் நடந்தது.
அதில், கரூர் மாவட்டத்தில் செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை, உறுப்பினராக சேர்த்து கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, செஸ் பயிற்சி கொடுத்து சிறந்த வீரர்களாக உருவாக்குவது, மாவட்ட சங்கத்தை அங்கீகாரம் செய்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் செஸ் சங்கத்துக்கு நன்றி தெரிவிப்பது உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், இன்டர்நேஷனல் செஸ் போட்டி நடுவர் ஆனந்த பாபு, மாவட்ட துணைத் தலைவர் ராமசுப்பிரமணியன், உஷா, சிவ சுப்பிரமணியம், செயலாளர் சண்முகம், பொருளாளர் முகமது கமாலுதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.