/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்; அன்பாலயத்தில் உணவு வழங்கல்
/
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்; அன்பாலயத்தில் உணவு வழங்கல்
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்; அன்பாலயத்தில் உணவு வழங்கல்
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்; அன்பாலயத்தில் உணவு வழங்கல்
ADDED : மார் 03, 2025 07:30 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக, கரூர் மாநகராட்சி, 48 வார்டுகள், 3 நகராட்சிகள், 8 டவுன் பஞ்சாயத்துகள், 157 பஞ்சாயத்துகள் ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இதன்படி, கரூர் தான்தோன்றிமலை அன்பாலயத்தில், மாவட்ட தி.மு.க., சார்பில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அக்கட்சி மாவட்ட செயலாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கினார். தொடர்ந்து, வெண்ணைமலை அன்புகரங்கள், கரூர் சாந்தி நிலையம், வெள்ளியணை ராகவேந்திரா ஆதரவற்றோர் இல்லம் உள்பட பல்வேறு இடங்களில் மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாநகர செயலாளர் கனகராஜ், மண்டல தலைவர்கள் ராஜா, அன்பரசு, மாநகர பகுதி செயலாளர்கள் ஜோதிபாசு, சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.