/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பை போட்டி தொடக்கம்
/
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பை போட்டி தொடக்கம்
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பை போட்டி தொடக்கம்
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பை போட்டி தொடக்கம்
ADDED : ஆக 27, 2025 02:40 AM
கரூர், கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார். இப்போட்டி செப்., 12 வரை  மாவட்ட அளவில், 5 பிரிவுகளில் மொத்தமாக, 53 வகையான போட்டி நடத்தப்படுகிறது. மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா, 3,000 ரூபாய், இரண்டாம் பரிசு தலா, 2,000 ரூபாய், மூன்றாம் பரிசு தலா, 1,000 ரூபாய் சான்றிதழ்களுடன் பதக்கம் வழங்கப்படும்.
போட்டியில் பள்ளி பிரிவில், 7,763 பேரும், கல்லுாரி பிரிவில், 7,349 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 243 பேரும், அரசு பணியாளர்கள் பிரிவில், 749 பேரும், பொதுப் பிரிவில் 5,945 பேரும், என மொத்தம், 22,049 வீரர், வீராங்கனைகள் இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ளனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் கரூர்
எஸ்.பி., ஜோஸ்தங்கையா, மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன்,  மாவட்ட விளையாட்டு அலுவலர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.