/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று கரூர், க.பரமத்தி வட்டாரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

ADDED : பிப் 12, 2025 07:18 AM
கரூர்: கரூர், க.பரமத்தி வட்டாரங்களில், இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தின் மூலம், 40 இடங்களில் கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்படவுள்ளன. க.பரமத்தி வட்டாரத்தில், சின்னதாராபுரம் கிராமத்தில், அம்மன் மஹால், புஞ்சைகாளக்குறிச்சி கிராமத்தில் எல்லைமேடு புதுார் வி.கே.டி மஹாலிலும், பவித்திரம் கிராமம், பள்ளமருதுபட்டி சமுதாயகூடத்திலும், பரமத்தி வட்டாரத்தில் குளம் நகரில் உள்ள செல்வக்குமார் மஹாலிலும், கரூர் வட்டாரத்தில் வேட்டமங்கலம் கிராமத்தில் செல்வ நகர் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் இன்று (12ம் தேதி) மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது. மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கலாம்.இவ்வாறு, கூறியுள்ளார்.