சிறார்களிடம் 'சில்மிஷம்' தொழிலாளிக்கு 'குண்டாஸ்'
சிறார்களிடம் 'சில்மிஷம்' தொழிலாளிக்கு 'குண்டாஸ்'
ADDED : ஏப் 17, 2026 04:00 AM
கரூர்: மூன்று சிறார்களுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானார்.
கரூர் மாவட்டம், வெங்கமேட்டை சேர்ந்தவர் தொழிலாளி வேலுச்சாமி, 56. இவர், அதே பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமியர், ஒரு சிறுவனுக்கு, சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி ஒருவரின் தாய், மகளிர் போலீசில் புகாரளித்தார்.
மார்ச், 20ல் கைதான வேலுச்சாமி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், வேலுச்சாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்ய வேண்டும் என, எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் ரவிக்குமாருக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து, வேலுச்சாமியை, குண்டாஸில் கைது செய்ய, கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டார். பின், திருச்சி மத்திய சிறையில் உள்ள வேலுச்சாமியிடம், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்ததற்கான நகலை, போலீசார் வழங்கினர்.
