ADDED : நவ 30, 2024 01:04 AM
குழந்தைக்கு தொல்லை
10 ஆண்டு சிறை
நாமக்கல், நவ. 30-
திருவாரூர் மாவட்டம், கீழநல்லம்பூரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 40; இவர், ப.வேலுாரில் சமையல் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த, 2010 அக்., 13ல், நண்பர் வீட்டிற்கு சென்ற கார்த்திகேயன், அங்கு தனியாக இருந்த, 3 வயது குழந்தையிடம், குடிபோதையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் ப.வேலுார் போலீசில் புகாரளித்தனர். அதன்படி, போக்சோ சட்டத்தில், கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி முனுசாமி, நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, கார்த்திகேயனை, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

