ADDED : ஏப் 04, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மிளகாய் அறுவடை பணி நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, போத்துராவூத்தன்பட்டி, அந்தரப்பட்டி, மத்திப்பட்டி, புனவாசிப்பட்டி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில், மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில், மிளகாய் சாகுபடிக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகளில் விளைச்சல் கண்டு, சிவப்பு நிறங்களில் மிளகாய் பழுத்து வருகிறது.
இவைகளை விவசாய கூலி தொழிலாளர்கள் பறித்த பின், வெயிலில் உலர்த்தப்படுகிறது. பின்னர் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது வரத்து குறைவு காரணமாக மிளகாய் கிலோ, 220 ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. கரூர், திருச்சி பகுதிகளில் செயல்படும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை நடக்கிறது.
