/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மிளகாய் அறுவடை தீவிரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மிளகாய் அறுவடை தீவிரம்
ADDED : பிப் 21, 2024 01:42 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மிளகாய் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, மேட்டுப்பட்டி, புதுப்பட்டி,
தாளியாம்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, சிவாயம், பாப்பகாப்பட்டி,
மலையாண்டிப்பட்டி, சரவணபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக மிளகாய்
சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் செடிகளுக்கு தண்ணீர்
பாய்ச்சப்படுகிறது. இதில் செடிகள் வளர்ந்து பூக்கள் பிடித்து காய்கள்
காய்த்துள்ளது. பழுத்து வரும் மிளகாய்களை, விவசாய தொழிலாளர்களை கொண்டு
அறுவடை பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மிளகாய் கிலோ, 190 ரூபாய்க்கு விற்பனை
நடக்கிறது.

