/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரத்து அதிகரிப்பால் சரிந்தது மிளகாய் விலை
/
வரத்து அதிகரிப்பால் சரிந்தது மிளகாய் விலை
ADDED : ஏப் 12, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மிளகாய் வரத்து அதிகரிப்பு காரணமாக விலை சரிந்துள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, கணக்கம்பட்டி, அந்தரப்பட்டி, கொமட்டேரி, சிவாயம், பாப்பகாப்பட்டி, மேட்டுப்பட்டி, குழந்தைப்பட்டி, வரகூர் ஆகிய பகுதி விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்தனர்.
தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் முதல் ரகம் மிளகாய் கிலோ, 210 ரூபாய்க்கு விற்றது. தற்போது வரத்து அதிகம் காரணமாக விலை சரிந்து வருகிறது. நேற்று கிலோ, 160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆந்திரா மாநிலம் மிளகாய் வரத்து அதிகரிப்பால், உள்ளூர் மிளகாய் விலை சரிவு கண்டு வருகிறது.

