/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண்ணிடம் சில்மிஷம்; கடை உரிமையாளர் கைது
/
பெண்ணிடம் சில்மிஷம்; கடை உரிமையாளர் கைது
ADDED : ஜூன் 21, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : மளிகை பொருட்கள் வாங்க வந்த பெண்ணிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம், வெள்ளியணையில் சூரியா நகரை சேர்ந்த முத்துராஜா, 42, என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த, 31 வயது பெண் நேற்று முன்தினம், கடைக்கு வந்துள்ளார். அப்போது பொருட்கள் கொடுக்கும் போது, அந்த பெண்ணிடம் முத்துராஜா தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து அளித்த புகார்படி, வெள்ளியணை போலீசார் விசாரித்து, முத்துராஜாவை கைது செய்தனர்.