/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடி மாரியம்மன் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
சிந்தலவாடி மாரியம்மன் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
சிந்தலவாடி மாரியம்மன் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
சிந்தலவாடி மாரியம்மன் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : மே 20, 2025 07:23 AM
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில், தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் காவிரி ஆற்றில் குளித்து விட்டு, அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் உடம்பில் அலகு குத்துதல், அக்னி கட்சி எடுத்தல், தொட்டில் குழந்தை, தீர்த்தக்குடம் எடுத்தல், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை ஆகிய சிறப்பு வழிபாடு பூஜை செய்யப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.