/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிட்பண்ட் பணம் மோசடி? 4 பேர் மீது வழக்கு பதிவு
/
சிட்பண்ட் பணம் மோசடி? 4 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : நவ 22, 2024 01:28 AM
சிட்பண்ட் பணம் மோசடி?
4 பேர் மீது வழக்கு பதிவு
குளித்தலை, நவ. 22-
குளித்தலை அடுத்த, நெய்தலுார் பஞ்.,
கட்டாணிமேடு கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன், 51. விவசாய கூலி தொழிலாளி. தோகைமலையில் இயங்கி வந்த எஸ்.எம்.சிட் பண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில், சேமிப்பு சீட்டு மற்றும் ஏலச்சீட்டு போன்ற திட்டங்களில் பணம் சேமிப்பு செய்து வந்தார்.
இதில் இரண்டு லட்சம் ரூபாய் சீட்டில், கடந்த ஆண்டு பிப்., 15 முதல் சேர்ந்து மாதந்தோறும் தவணை செலுத்தியதில், 1 லட்சத்து, 78 ஆயிரத்து, 400 ரூபாய் கட்டி முடித்து, முதிர்வு தொகையை பெற நிறுவனத்தை அணுகினார். கடந்த, 15ல் சிட்பண்ட் நிறுவனம் பூட்டி இருந்தது.
இது குறித்து பணம் வசூலில் ஈடுபட்ட முதலைப்பட்டியை சேர்ந்த வினோத், லோகநாதன், காவல்காரன்பட்டியை சேர்ந்த முருகானந்தம், நாகனுார் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீது தோகைமலை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.