/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
11 வயது சிறுவன் கொலை கரூர் அருகே சித்தப்பா கைது
/
11 வயது சிறுவன் கொலை கரூர் அருகே சித்தப்பா கைது
ADDED : ஜன 15, 2024 10:29 AM
கரூர்: கரூர் அருகே சிறுவன் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார். ஆவேச சித்தப்பாவை போலீசார் கைது
செய்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், புகழூர் ரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் பாரதி, 11; கரூர் வெண்ணைமலையில் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் பண்டிகைக்கு பள்ளி விடுமுறை என்பதால், செம்படாம்பாளையம் செந்துார் நகரில் உள்ள, தாத்தா பொன்னுசாமி வீட்டுக்கு, சிறுவன் பாரதி நேற்று முன்தினம் சென்றார். வீட்டில் பாரதியும், அவரது சித்தப்பா மோகன்ராஜ், 40, நேற்றிரவு இருந்தனர்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் சிறுவன் பாரதி, மோகன்ராஜை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், பாரதியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
தகவலறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் விரைந்து சென்றனர். சிறுவன் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனை,
சித்தப்பாவே வெட்டி கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில், பலத்த அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.