/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில்களில் சித்திரை திருவிழாகரூர் கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'
/
கோவில்களில் சித்திரை திருவிழாகரூர் கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'
கோவில்களில் சித்திரை திருவிழாகரூர் கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'
கோவில்களில் சித்திரை திருவிழாகரூர் கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'
ADDED : மே 06, 2025 02:03 AM
கரூர்:கோவில் திருவிழாக்களில் மக்கள் மும்முரமாக இருப்பதால், கரூர் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. நேற்று குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்க மக்கள் வருவர்.
ஆனால், மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. அங்கு, அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கோடை விடுமுறைகளுக்கு பலர் வெளியூர் சென்று உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, குறைந்தளவே மக்கள் வந்திருந்தனர் .கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வப்போது, சிலர் மட்டுமே மனுக்கள் அளித்து சென்றனர்.
இருந்தபோதும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஐந்து பயனாளிகளுக்கு காதொலி கருவி மற்றும் மூன்று சக்கர சைக்கிள், மாற்றுத்திறனாளி குழந்தைகளையுடைய தம்பதியருக்கு, 8.67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்கு மாடி குடியிருப்பில், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். 2025ம் ஆண்டு தேசிய திறனாய்வு போட்டி தேர்வில், உதவித்தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எட்டாம் வகுப்பு மாணவி ஷர்மதாவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.