/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா நிறைவு
/
அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா நிறைவு
அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா நிறைவு
அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா நிறைவு
ADDED : மே 15, 2025 01:41 AM
கரூர் :அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில், சித்திரை திருவிழா, நேற்று புஷ்பயாகத்துடன் நிறைவு பெற்றது.
கரூர், அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் இரவு, உற்சவர் திருவீதி உலா வெகு சிறப்பாக நடந்தது.
மேலும், திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, ஆளும் பல்லக்கு, ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை, கல்யாண வெங்கடரமண சுவாமி, ரெங்கநாதர் சுவாமிக்கு புஷ்யாகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. புஷ்ப யாகத்துடன், சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.