/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் கிறிஸ்துமஸ் கீத பவனி
/
அரவக்குறிச்சியில் கிறிஸ்துமஸ் கீத பவனி
ADDED : டிச 16, 2025 05:40 AM

அரவக்குறிச்சி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அரவக்-குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிறிஸ்தவர்கள் பாடல்கள் பாடி, நடனமாடி கொண்டாடினர்.
தென்னிந்திய திருச்சபையின், ஒரு அங்கமான அரவக்குறிச்சி துாய தோமா ஆலயத்தில் கடந்த ஒரு வாரமாக சுற்றுவட்டார பகுதிகளில், கீதப-வனி நடந்து வருகிறது.சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்-களின் வீடுகளுக்கு சென்று, பாடல்கள் பாடி உற்-சாகப்படுத்தி வருகின்றனர். மேலும் குடும்பமாக பாடல்கள் பாடும் கீத ஆராதனையும் நடைபெற்-றது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அருகில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவி புரியுமாறு தென்னிந்திய திருச்சபை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல அரவக்குறிச்சியை தலைமையிட-மாக கொண்டு செயல்படும், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் வீட்டில் கீத பவனி நடைபெற்றது. இதில் ஏராள-மான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, குழந்தைக-ளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வித்தனர்.

