/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
படிக்கட்டு துறையில் தேங்கியுள்ள கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
/
படிக்கட்டு துறையில் தேங்கியுள்ள கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
படிக்கட்டு துறையில் தேங்கியுள்ள கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
படிக்கட்டு துறையில் தேங்கியுள்ள கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
ADDED : ஏப் 28, 2024 04:17 AM
கரூர்: கரூரில் போதிய சாக்கடை வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளனர்.
கரூர் படிக்கட்டுதுறை பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அப்பகுதியில், போதிய சாக்கடை வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதியில் தேங்கியுள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
அமராவதி கிளை வாய்க்கால் தற்போது, கழிவு நீர் வாய்க்காலாக மாறி விட்டது. கிளை வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதியான, படிக்கட்டு துறையில் சாக்கடை வசதி மற்றும் வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து, நேரடியாக குழாய் மூலம் கழிவு நீரை கிளை வாய்க்காலில் விட ஏற்பாடு செய்திருந்தோம்.
ஆனால், வாய்க்காலுக்கு செல்லும் கழிவுநீர் குழாய்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால், வீடு மற்றும் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ளது. இதுகுறித்து, பல முறை புகார் தெரிவித்தும், மாநகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
படிக்கட்டு துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் வசித்து வருகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, படிக்கட்டுதுறையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, வாய்க்காலில் கொண்டு சேர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

