/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் சி.ஐ.டி.யூ., வாயிற் கூட்டம்
/
கரூரில் சி.ஐ.டி.யூ., வாயிற் கூட்டம்
ADDED : மே 10, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர், திருமாநிலையூரில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் மண்டல அலுவலகம் முன் சி.ஐ.டி.யூ., சார்பில் வாயிற் கூட்டம் நடந்தது.கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
கோட்ட மேலாளர், தொழிலாளர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறார். தொழிலாளர்களுக்கு எதிராக மேலாளர் கையாளும் பல்வேறு விஷயங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில், - கரூர் மண்டல தலைவர் சீனிவாசன், செயலாளர் மாணிக்கம், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.